துரைமுருகனுக்கு எதிராக ஆட்டிறைச்சி வெட்டி இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பு! அப்பு அறிமுகம்!
கு.அசோக்,
காட்பாடியில் அதிமுக வேட்பாளர் வி.ராமு ஹிந்தி மற்றும் உருது பேசி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு-கறிக்கடையில் கறி வெட்டி நூதன பிரச்சாரம்
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகனை எதிர்த்து அதிமுக சார்பில் வி.ராமு போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
அதிமுக வேட்பாளர் வி.ராமு தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். செங்குட்டை பகுதியில் உள்ள பாரதியார் தெருவில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய வி.ராமு, வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஹிந்தி உருது ஆகிய மொழிகளின் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்கு சேகரிப்பு ஈடுபட்ட பொழுது எங்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவரிடம் எடுத்து வைத்தனர்.
மேலும் தெருக்களின் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக அவரிடம் வைத்தனர் அதற்கு உரிய நிவர்த்தி காணப்படும் என உறுதியும் அளித்தார்.
பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காட்பாடி சித்தூர் சாலையில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளுக்குச் சென்ற வேட்பாளர் ராமு அங்குள்ள கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் ஆதரவு கோரினார்.
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சித்தூர் சாலையில் இருந்த ஒரு கோழி ஆடு இறைச்சி கடைக்கு வேட்பாளர் வி. ராமு சென்றார் அங்கு வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்ததோடு மட்டுமல்லாமல் கையில் கத்தியை எடுத்து ஆட்டுக்கறியை வெட்டி வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.
வேட்பாளரின் இந்த நூதன பிரச்சாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதே போல் வேலூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அப்பு அறிமுக கூட்டமானது நடைபெற்றது
வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அப்பு அறிமுக கூட்டமானது அதிமுக பொருளாளர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் பாமக முன்னாள் அமைச்சர் என்.டி.சண்முகம்.பாஜக மாவட்ட தலைவர் தசரதன்,தமாக மாவட்டத்தலைவர் மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளானோர் பங்கேற்றனா.
¢ அப்போது வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அப்பு அறிமுகப்படுத்தப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிகாக கூட்டணி கட்சியில் உள்ள அனைவரும் உழைப்பது என முடிவு செய்யப்பட்டது.

admin
