நியூஸிலாந்தை சம்பவம்  செய்த இந்தியா! சாதனை படைத்த முகமது ஷமி!

நியூஸிலாந்தை சம்பவம்  செய்த இந்தியா! சாதனை படைத்த முகமது ஷமி!

 உ.சசிகுமார்,

  நேற்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் நியூஸிலாந்தை மண்ணை கவ்வ வைத்தது இந்தியா. 20 வருடங்களாக இல்லாத அதிரடியை தற்போது இந்திய டீம் அளித்திருக்கிறது.

    நேற்று பிற்பகல் துவங்கி நடந்த இந்தியா நியுசிலாந்து போட்டியில் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணியின்  மிட்செல் மிக அபாரமாக விளையாடி சதமடித்தார்.  அவருக்கு உறுதுணையாக ரச்சின் ரவிந்தரா அரைசதம் அடித்தார். இதனை அடுத்து நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது.  அப்போது இந்தியா பந்து வீச்சாளர்முகமது ஷமி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

  உலகக் கோப்பை தொடரில் முதல் நான்கு போட்டிகளிலும் அணியில் சேர்க்கப்படாத முகமது ஷமி முதல் முறையாக நேற்று அணியில் இணைக்கப்பட்டர். இந்நிலையில் அவர் முதல் போட்டியிலேயே தன்னை நிருபித்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார் ஷமி.

  இதன் மூலம் அவர் விளையாடிய 12 உலக கோப்பை போட்டிகளில் 36 விக்கெட்கள் வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர்கள் வரிசையில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு முன்னர் ஜாகீர் கான் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் 44 விக்கெட்களோடு முதல் இடத்தில் உள்ளனர் என்பது நினைவுகூறதக்கதாகும்.

  இந்நிலையில் ஐந்து விக்கெட்டுகள் கையிருப்பு இருந்த நிலையில் ஜடேஜா அடித்த பவுண்டரி மூலம் நியூஸிலாந்தை இந்தியா வீழ்த்தியது.