புதிய ஆவின் கடை எதிரில் கல்லை கொட்டிய நபர்கள்! போலிசார் விசாரணை!
ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பனந்தோப்பு பகுதியில் பல வருடங்களாக நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடத்தில் மோகனா (60) என்பவர் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் அந்த இடத்தில் பீடி சுற்றும் தொழில் செய்யும் அவரது மருமகள் லட்சுமி (38) என்பவருக்கு மகளிர் திட்டம் மூலம் தமிழக அரசு சார்பில் ஆவின் பாலகம் கொடுத்துள்ளனர்.
அதனை வைத்து பிழைப்பு நடத்த திட்டம் போட்டு அதற்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் பூஜை செய்து உள்ளனர்.

அப்போது அந்த கடைக்கு பின்னால் இருக்கும் நிலத்து உரிமையாளர்கள் பளபளப்பான பாலாகம் மற்றும் பாய்லரை பார்த்ததும் கடைக்கு எதிரில் டிராக்டர் மூலம் உடைக்கள் கொண்டு வந்து கொட்டி உள்ளனர்.
இதனால் மனமுடைந்த மூதாட்டி மற்றும் அவரது மருமகள் லட்சுமி ஆகியோர் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டீக்கடை திறந்ததும் மக்கள் யாரும் வந்து விடக்கூடாது என்பதற்காக காலையிலேயே கல்லைக் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

admin
