கடத்தப்பட்ட 1480 போதை மாத்திரைகள்! ரயில்வே போலீஸ் அதிரடி!
கு.அசோக்,
ரயிலில் கடத்தப்பட்ட 1480 போதை மாத்திரைகள் அதிரடியாக கைப்பற்றி இருவர் கைது அரக்கோணத்தில் ரயில்வே போலீசார் அதிரடி.
ரயில்கள் மற்றும் பொது போக்குவரத்து மூலமாக காவல்துறையினருக்கு சந்தேகம் அளிக்காத வகையில் போதை மாத்திரைகள் கடத்தல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்கும் வகையில் அவ்வப்போது ரகசிய தகவலின் பெயரில் காவல்துறையினர் தொடர்ந்து போதை மாத்திரைகள் கடத்தலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்தும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
அந்த வகையில் இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வழியாக ரயில் மூலமாக போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மும்பையில் இருந்து சென்னை செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகம் அளிக்கக் கூடிய வகையில் இருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்களுடைய பையை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து போதை மாத்திரைகள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த 1480 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் போதை மாத்திரைகளை அரக்கோணம் கலால் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொண்ட கலால் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது கைது செய்யப்பட்டவர்கள் சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த மன்சூர் பாஷா மற்றும் கலீல் என தெரியவந்தது.
மேலும் இவர்கள் யாருக்காக போதை மாத்திரைகளை கடத்துகிறார்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து விசாரணையானது நடைபெற்று வருகிறது.

admin
