போலி டாக்டர்கள்! திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ளனர்!
ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் அருகே மருத்துவம் படிக்காமலேயே கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது கிளினிக்கிற்கு சீல் வைப்பு.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் மருத்துவம் படிக்காமலேயே டிப்ளமோ ஆயுர்வேதிக் யுனானி படித்ததாக கூறி போலி சான்றிதழ் வைத்துக் கொண்டு பழனிராஜன் (65) என்பவர் பொது மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த அம்பாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் மகன் ஈஸ்வரன் என்பவர் வேலூர் மாவட்டம் அகரம் பகுதியிலுள்ள டாக்டர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
மேலும் ஈஸ்வரன் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள அரசினர் சமூக நீதி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் ஈஸ்வரன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த (26:08:25,) அன்று விடுதியின் அருகில் செயல்பட்டு வரும் குமரன் கிளினிக் சென்று அங்கிருந்த போலி மருத்துவர் பழனிராஜன் என்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.

சிகிச்சை பெற்று சென்ற சில மணி நேரத்திலேயே மயக்கம் அடைந்த மாணவனை சக மாணவர்கள் மீட்டு மாணவனின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் உடல்நிலை மோசமானதால் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மருத்துவம் படிக்காமலேயே டிப்ளமோ ஆயுர்வேதிக் யுனானி படித்ததாக கூறி போலி சான்றிதழ் வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த பழனிவேல் ராஜன் என்பவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சி உத்தரவின் பேரில் ஆம்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் யோகேஸ்வரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு போலி மருத்துவர் பழனிராஜன் என்பவரை கைது செய்தனர்.
அங்கிருந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கிளினிக் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை பல போலி மருத்துவர்கள் செயல்பாட்டில் உள்ளனர். அவர்களில் போலீஸ்காரரும் ஒருவர்.

admin
