அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாயார் மறைவு - முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

தாம்பரம் முரளிதரன்,
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக குறு - சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் அவர்களின் தாயார் ராஜாமணி அம்மாள் (வயது 83) அவர்கள் நேற்று இரவு 10.00 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார்.
இதனையொட்டி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
உடன் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.