குழந்தை ஆணா பெண்ணா சொல்லக்கூடாது!கலெக்டர் எச்சரிக்கை!
கு.அசோக்,
ஸ்கேன் மூலம் பாலின தேர்வை கண்டறிவது குற்றம் இளம் கருத்தரிப்புகள் காரணமாக மகப்பேறு தாய்மார்களுக்கு ரத்தசோகை உடல் பருமன் குழந்தை எடை குறைதல் போன்றவைகள் மகப்பேறு காலமரணங்களாக இருக்க கூடிய வேலூர் மாவட்ட தாய்மார்களின் சவாலாக உள்ளது - பாலின தேர்வு தடை சட்டம் 1994 குறித்து விழிப்புணர்வு பயிற்சி கூட்டத்தில் ஆட்சியர் சுப்பு லெட்சுமி பேச்சு
வேலூர்மாவட்டம்,காட்பாடி விருதம்பட்டில் இந்திய மருத்துவர்கள் சங்க கட்டிடத்தில் அரசு மற்றும் தனியார் ஸ்கேன் மையங்களுக்கு பாலின தேர்வு தடை சட்டம் 1994 குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பியூலா,சுகாதார அலுவலர் சதிஷ் மற்றும் திரளான மருத்துவர்களும் ஸ்கேன் மைய உரிமையாளர்களும் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி பேசுகையில் பாலின தேர்வுதடை சட்டம் 1994 ஆம் ஆண்டின் படி பாலினம் கண்டறிந்து ஸ்கேன் மூலம் தெரிவிப்பது சட்டபடி குற்றமாகும்.
அதிகப்படியான இளம் பெண்கள் கருத்தரிப்பு ரத்தசோகை உடல் பருமன் குழந்தை எடை குறைபாடு போன்றவைகள் இளம் கருத்தரிப்பு காரணமாக ஏற்படுகிறது.
அனைத்தும் நமக்கு மகப்பேறு காலமரணங்களாக இருக்கக்கூடியவைகள் நமது மாவட்டம் உள்ளது இந்த சவால்களை எல்லாம் நாம் சந்தித்து வருகிறோம்.
இதுகுறித்து பயிற்சி முகாமினை நடத்தி ஸ்கேன் மையங்களுக்கு இந்த பிரச்சணைகள் மற்றும்சட்ட நுனுக்கங்களை எல்லாம் உங்களுக்கு தெரிவித்தால் நீங்கள் அனைவரும் உங்கள் பங்களிப்பை அளித்து மகப்பேறு கால மரணங்களை தாய் சேய் இறப்புகளை தடுக்க வேண்டும்.
பெண் குழந்தை, ஆண் குழந்தை என்ற பாகுபாடு உள்ளது ஆனால் நான் படித்த ஒரு கட்டுரை புள்ளிவிவரத்தின் அடிப்படையில் எந்த வீட்டில் பெண் குழந்தைகள் நன்கு படித்து வளர்கின்றனரோ அந்த வீட்டில் முதியவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்.
இந்த விழிப்புணர்வை நீங்கள் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென பேசினார்.
கலெக்டர் எதைக்குறித்து எச்சரித்தாரோ அந்த வேலையைத் தான் பல கருதரிப்பு மையங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

admin
