மலைபள்ளி மாணவர்களுக்கு உணவு சப்ளை:-தகுதிவாய்ந்த நிறுவனம் விண்ணப்பிக்கலாம் - திருப்பத்தூர் ஆட்சியர் அறிவிப்பு!!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலை, புதூர்நாடு பகுதியில் உள்ள அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உணவு வழங்கும் பணி மற்றும் பள்ளி / விடுதியில் சமையலர்களை தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்துவது, நிர்ணயிக்கப்பட்டுள்ள உணவுக்கட்டணத்திற்கு மிகாமல் பணி மேற்கொள்ள தகுதி -வாய்ந்த நிறுவனத்திடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
உணவுக்கட்டண வீதம் (விடுதியில் தங்கும்) நாட்கள் மட்டும்.
புதூர்நாடு ஏகலைவா உண்டி உறைவிட பள்ளியில் மாணவ , மாணவியர்களுக்கு வெளிமுகமை மூலம் உணவு வழங்க மாவட்ட அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டும்.
ஒரு நிதியாண்டில் ரூ .60,00,00 / - ரூபாய் அறுபது இலட்சம் மட்டும் ) மற்றும் அதற்குமேல் Turnover மேற்கொள்ளும் நிறுவனங்கள் மட்டுமே ஒப்பந்தத்தில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படுகிறது.
மேலும் அறிவிக்கையில் பொது அறிவுரைகளில் (General Instructions) காப்பீட்டு வைப்புத் தொகை குறித்த 04.08.2022 நாளிட்ட பழங்குடியினர் நல இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு கீழ்க்காணும் அறிவுரை தவறாது இடம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Security Deposit
The Successful Tenderer will have to pay a security deposit of 5 % of the total cost by drawing a demand draft from the Nationalized Bank in favor of Project officer ( Tribal Welfare ) Officer . Security Deposit of the successful tenderer has to be submitted within a week of the date of receiving the order . EMD of the successful tenderer can be adjusted against the security deposit . If he fails to respond within a week , the EMD paid will be forfeited . The successful tenderer if after payment of security deposit fails to comply with preparation / supply of the catering from the date specified in the supply order / contract order the security deposit will also be forfeited to the Govt . Security deposit of the successful tenderer is refundable only after the successful completion of the contract period after proper audit . If the catering contract is not satisfactory / not supplied on time the contract is liable to be cancelled without notice with forfeiture of security deposit amount . The security deposit amount so forfeited will neither be a fine is compensation but for the damages sustained as a result of failure .
திருப்பத்தூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,, ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் வெளிமுகமை மூலம் உணவு வழங்கும் நேர்வில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு சமைப்பதற்கான கட்டணத்தையும் சேர்த்து 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு அதிகபட்சமாக ரூ .1300 எனவும்,
9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்கு அதிகபட்சமாக ரூ .1400 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் மாணாக்கர்களுக்கு உணவு தயாரித்து இறுதியாக உணவு வழங்குவது என்பது வெளிமுகமை ஒப்பந்த்தார்ரின் பொறுப்பாகும்.
இதில் சமையலர்களுக்கான ஊதியம் வழங்குவது, ஒப்பந்த நிறுவனத்தை சார்ந்தது என்பதால் சமையலுக்கான கட்டணத்தை மாணாக்கரின் உணவுக் கட்டணத்துடன் சேர்த்து 6 முதல் 8 வகுப்பு வரை ரூ .1300 எனவும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூ .1400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே விண்ணப்பிக்க உள்ளவர்வர்கள் வருகின்ற 15.09.2022 மாலை 5.45 மணிக்குள் திட்ட அலுவலர் பழங்குடியினர் நலம் பி - பிளாக் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் திருப்பத்தூர் என்ற முகவரிக்கு விண்ணப்பம் வந்து சேர வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா. இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.