மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்தார்!
ஜி.கே.சேகரன்,
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2026 விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
திருப்பத்தூர்மாவட்டம்,தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2026-ஐ முன்னிட்டு, திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை, மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் 50க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியபடி பேரணியாக சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, தூய நெஞ்சக் கல்லூரி வரை சென்றடைந்தது.
பேரணியில், வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராகவன், வட்டாரப் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் சம்பத்குமார், திருப்பத்தூர் உதவி கோட்ட பொறியாளர் வெங்கட்ராமன், இளநிலை பொறியாளர்கள் பாபுராஜ், முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
இந்த நிகழ்ச்சி மூலம் சாலை விபத்துகளை குறைத்து, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

admin
