சத்துணவில் பல்லி! சுவர்களை சுற்றிப்பார்த்த சட்டமன்ற உறுப்பினர்!
ஜி.குலசேகரன்,
பல்லி விழுந்த சத்துணவை சாப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. வேலூர் சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு - மருத்துவகுழுவினர் பள்ளிக்கே வந்து சிகிச்சை.
வேலூர்மாவட்டம்,வேலூரில் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அரசின் சார்பில் வழங்கப்படும் மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சத்துணவை வாங்கி சாப்பிட்ட நிலையில் சத்துணவில் பல்லி இருந்ததால் சுமார் 75-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனால் பள்ளி மாணவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. உடனடியாக பள்ளிக்கு இரண்டு மருத்துவ குழுவினர் வருகை தந்து மாணவர்களை மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் மாணவர்களிடம் நலன் விசாரித்துடன் சத்துணவு கூடத்தையும், சுவர்களையும் ஆய்வு செய்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் அங்கு குவிந்து, பிள்ளைகளை அழைத்து சென்றனர்.
பள்ளி மாணவர்களும் வீட்டிற்கு உடனடியாக கிளம்பி சென்றனர் இதனால் பரபரப்பு காணப்பட்டது சத்துணவும் மாதிரிக்கு எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

admin
