தந்தையை கொன்ற மகன்! சொத்துக்காக வெறிச்செயல்!
கு.அசோக்,
குடும்ப சொத்தை தர வேண்டுமென கேட்டு தந்தையின் கன்னத்தில் மகன் அறைந்ததால் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு. கொலையாளி கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ஐபேடு கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன்(70),இவர் விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நரசிம்மனுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை இருக்கின்றனர். இதனை தொடர்ந்து இன்று நரசிம்மன் வீட்டின் அருகாமையில் இருக்கக்கூடிய விவசாய நிலத்திற்கு விவசாய பணிகளை மேற்கொள்ள சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு சென்ற மூத்த மகனான செல்வம்(40) என்பவர் தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை தரும்படி தந்தை நரசிம்மனிடம் கேட்டுள்ளார். அதற்கு நரசிம்மன் தர மறுத்ததாக கூறப்படுகிறது.
அதனால் ஆத்திரமடைந்த செல்வம் தனது தந்தையான நரசிம்மர் கன்னத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
அப்போது நரசிம்மன் மயக்கம் அடைந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த சோளிங்கர் காவல் துறையினர் உயிரிழந்த நரசிம்மனின் உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்காக கொண்டு சென்றனா.¢
தந்தையை கொலை செய்த குற்றத்திற்காக மகனான செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து சோளிங்கர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.

admin
