ஆதரவற்ற ஜோடிக்கு திருமணம் செய்ய அனுமதித்த கலெக்டர்! ஆர்.டி.ஓ. மற்றும் கவுன்சிலர் முன்னிலையில் நிகழ்வு!
ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி கருணை இலத்தில் ஆதரவற்ற ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்தவர் டேவிட் சுபாஷ், விஜிலா டேவிட் தம்பதியினர். இவர்கள் கடந்த 32 ஆண்டுகளாக சரணாலயம் டிரஸ்ட் கருணை இல்லம் என்ற பெயரில் ஆதரவற்ற இல்லம் நடத்தி வருகின்றனர்.
இவருடைய இலத்தின் மொத்தம் 67 பிள்ளைகள் மற்றும் 288 முதியவர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு வாணியம்பாடி அடுத்த நெகுந்தி சுங்கச்சாவடி பகுதியில் சுஜாதா என்ற 4 வயது சிறுமியை மீட்டு தன்னுடைய இல்லத்தில் வளர்த்தும் கல்வி கொடுத்து கடந்து 2024 ஆம் வாணியம்பாடி தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி ஊட்டச்சத்து முடித்துள்ளார்.

இதே போல் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே ஹைதராபாத் பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரி இளைஞர் புருஷோத்தமன் என்பவரை மீட்டு தன்னுடைய இல்லத்தில் வைத்து பராமரித்து தற்சமயம் நல்ல நிலையில் உள்ளார்.
இந்த நிலையில் புருஷோத்தமன்(29) மற்றும் சுஜாதாவுக்கும் (26) மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அனுமதி பெற்று மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சுமதி உத்தரவின் பேரில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் மற்றும் நகரமன்ற உறுப்பினர் வி.எஸ்.சாரதி குமார் முன்னிலையில் கருணை இல்ல வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியில் வாணியம்பாடி வட்டாட்சியர் சுதாகர், தொழிலதிபர் ஆர்.ஆர் வாசு உட்பட அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
32 ஆண்டுகளில் கருணை இல்லத்தில் வளர்ந்த 14 பேருக்கு திருமணம் நடத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

admin
