வெற்றி தோல்வியை பார்க்காமல் நண்பர்களாக விளையாடுங்கள்! நறுவீ சம்பத் பேச்சு!

ம.பா.கெஜராஜ்,
வெற்றி தோல்வியை பார்க்காமல் நண்பர்களாக பாவித்து விளையாட வேண்டும் என வேலூர் நறுவீ மறுத்துவமனையின் நிறுவன தலைவர் ஜி.வி.சம்பத் பேசினார்.
இது பற்றின விவரம் வருமாறு,
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி, மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் நறுவீ ஜி.வி.சம்பத் தலைமையில் நடந்தது. வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் இதனை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்கள் வேலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் திருச்சி என 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 5 நாட்கள் இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. மண்டலம் 'பி'-யில் அடங்கிய வேலூர், செங்கல்பட்டு, தஞ்சாவூர், கடலூர், விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நேற்று காலை வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் தொடங்கியது.
கிரிக்கெட் போட்டி தொடக்க விழா மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவருமான முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்ற அணி வீரர்களை எதிரிகளாக பார்க்காமல், வெற்றி தோல்வியை பார்க்காமல் நண்பர்களாக பாவித்து விளையாட வேண்டும். விளையாட்டில் தோல்வி என்பது வெற்றிக்கு அடுத்த படியாகும் என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் குமரவேல் பாண்டியன் விருந்தினராக பங்கேற்று போட்டியாளர்களை வாழ்த்தினார்.
இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் விளையாட்டு (கிரிக்கெட் போட்டி) குழு தலைவர் கூத்தரசன், வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் சாய் விக்னேஷ்வரன், துணைத் துணைத் தலைவர்கள் கிருஷ்ணகுமார், கங்காதரன், இணை செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் போட்டியில் வேலூர் மாவட்ட கிரிக்கெட் அணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் அணியும் மோதின. கிரிக்கெட் போட்டிகளை சென்னையை சேர்ந்த் கே.எச். கோபிநாத் நடுவராக இருந்து வெற்றி பெறும் அணிகளை தேர்வு செய்கிறார்.
மாவட்டங்களுக்கு இடையிலான மாநில அளவிலான இப்போட்டியில் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்து வெற்றி பெறும் இரண்டு அணிகள் அடுத்த கட்ட போட்டிகளில் பங்கேற்பர்.