டுபாக்கூர் சிலம்பம் மாஸ்டர்களை களையெடுக்க திட்டம்!

 டுபாக்கூர் சிலம்பம் மாஸ்டர்களை களையெடுக்க திட்டம்!

 பா.சுரேஷ்,

  சமீபகாலமாக டுபாக்கூர் சிலம்பம் மாஸ்டர்கள் களம் இறங்கி ஏழை எளிய சிறுவர் சிறுமியர்களை ஏமாற்றி பணம் பறித்து வருகிறார்கள். மாஸ்டர் என சொல்லிக்கொண்டு திரியும் அவர்கள் முறையாக பயிற்சி பெற்றவர் கிடையாது. அதே போல் எந்தவித அனுதியும் பெற்றது கிடையாது.

  இவர்கள் நடத்துகும் சிலம்பம் பள்ளியே அரசு புறம்போக்கு இடத்தில் தான் இருக்கும்.

  இது போன்ற ஆசாமிகள், தங்களிடம் சிலம்பம் கற்றுக் கொண்டால் அரசு பணி கிடைக்கும் என்று பொய் சொல்லி பணத்தை கறந்துவருகிறார்கள். இதை தடுக்கும் விதமாகவும், முறையாக பயிற்சி எடுத்த மாஸ்டர்கள் யார் என்பதை அடையாளம் காணும் விதமாகவும்சென்னையில் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பு விளையாட்டு கலைக்கழகம் நடத்திய சர்வதேச அளவிலான நடுவர் குழு பயிற்சி முகாம் நடைபெற்றது.

 இதில் சர்வதேச அளவில் நடைபெறவுள்ள சிலம்பு போட்டி மற்றும் ரைட் பைட்டிங் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் க்கான புதிய விளையாட்டு விதிமுறைக்கான ஆலோசனை முன்னோட்டம்  துவக்கி வைக்கப்பட்டன. விளையாட்டு விதிமுறைகளை நன்கு பயிற்சி பெற்ற மாணவ - மாணவிகளை ஊக்குவிப்பதற்கு தயார் நிலையில் நடுவர்கள் இருக்க உறுதிமொழி ஏற்றனர்.

   இந்த ஏற்பாட்டினை தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கழகத்தின் தலைவர் ரேணுகோபால், துணைத் தலைவர் மில்டன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இத்துடன் தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு செங்கல்பட்டு மாவட்ட துணைத் தலைவர் தெள்ளிமேடு கே.பாபு அவர்களின் ஏற்பாட்டில் சிறந்த முறையில் நடைபெற்றது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆசான்மார்களும், பயிற்சியாளர்களென 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.