போலி பெண் மருத்துவர் கைது! 12ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது அம்பலம்!

போலி பெண் மருத்துவர் கைது! 12ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது அம்பலம்!

செய்தி: ஜி.குலசேகரன்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே 12ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த 53 வயது பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அம்பலூர் ஊராட்சி கோகுல் சிட்டி பகுதியில் வசித்து வந்த தனலட்சுமி என்பவர் மருத்துவப் படிப்பு படிக்காமல் மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட சுகாதாரத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர் கணேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மருத்துவப் படிப்பு படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவரை அம்பலூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மருத்துவர் கணேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தனலட்சுமியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர