பிரபல நடிகை கைது!டாக்டரை வீட்டிற்கு வரவழைத்து 12 பேருடன் சேர்ந்து தாக்கிய வழக்கு விவகாரம்

பிரபல நடிகை கைது!டாக்டரை வீட்டிற்கு வரவழைத்து 12 பேருடன் சேர்ந்து தாக்கிய வழக்கு விவகாரம்

செய்தி: ஆர். ரவி காலேப்,
கேரள மாநிலம் கொச்சியில் டாக்டர் ஒருவரை தாக்கி, அவரிடம் இருந்த விலை உயர்ந்த பொருட்களைப் பறித்ததாக பிரபல நடிகை அதுல்யா சந்திரா கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை அதுல்யா சந்திரா, தனது உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி 41 வயதுடைய டாக்டர் ஒருவரை அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வரவழைத்துள்ளார்.

அங்கு சென்ற டாக்டரை நடிகை அதுல்யா சந்திரா உள்ளிட்ட 12 பேர் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், அவரிடமிருந்த சுமார் ரூ.3.25 லட்சம் மதிப்புள்ள இரண்டு செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இயர்பட்ஸ் ஆகியவற்றைப் பறித்துச் சென்றுள்ளனர்.

இதுமட்டுமின்றி, ரூ.6 கோடி பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் டாக்டரை மிரட்டியதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட டாக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகை அதுல்யா சந்திரா மற்றும் மற்றொருவரைக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.