ஜெயில் கைதிகளுக்காக தேடி தேடி புத்தகம் வாங்கிய ஆட்சியர்!
ஜி.குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியோர் இணைந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் 5வது முறையாக புத்தக திருவிழா நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் நாள் தோறும் ஒவ்வொரு படைப்பாளர்கள், பேச்சாளர்கள் கலந்து கொண்டு நல்ல கருத்துகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி திடீரென்று புத்தக அரங்கிற்குள் நுழைந்து மணி கணக்கில் புத்தகங்களை தேடி தேடி பார்த்து கொண்டு இருந்தார்.
அப்போது நூலகர்கள் இந்த புத்தகம் அந்த புத்தகம் என்று கொடுத்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் நான் சிறை கைதிகளுக்காக புத்தகம் வாங்க வந்தேன். அவர்கள் வாழ்வில் மேம்பட நல்ல நூல்களை தேடி தேடி எடுத்து கொண்டு இருக்கேன் என்று கூறி பல நல்ல புத்தகங்களை தேடி சிறை கைதிகள் படிக்க சிறைத் துறை காவலரிடம் வழங்கினார்.
கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கிய இந்த புத்தக திருவிழா 8ம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெற அனுமதி அளிக்கப்பட்டு அதற்கு ஏற்றவாறு படைப்பாளிகளை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க திட்டம் போட்டு இருந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட மக்கள் புத்தகம் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருவதால் மாணவர்கள் மற்றும் மக்களின் நலன் கருதி 8ம் தேதியே முடிவடைய வேண்டிய புத்தக திருவிழாவை மேலும் 3 நாட்கள் நீட்டித்து வருகின்ற 11ம் தேதி வரை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இதனை முறையாக பத்திரிகை செய்தி அளிக்கவும் உத்தரவிட்டார். அப்போது அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கொடி நாள் வசூல்

2025ஆம் ஆண்டிற்கான படைவீரர் கொடிநாள் நிதி வசூல் உண்டியலில் பணம் போட்டு துவக்கி வைத்து தேநீர் விருந்து அருந்திய மாவட்ட ஆட்சியர்!
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. கொடி நாள் கொண்டாடும் மரபானது 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாட்டைக் காக்கும் தியாக உணர்வுடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு, அதனை நிறைவேற்றும் வகையில் கொடி விற்பனை செய்யப்படுகிறது.
அதன் மூலம் கிடைக்கும் நன்கொடைகள் மூலம் திரட்டப்படும் நிதியானது படைவீரர்களின் குடும்ப நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த முன்னாள் வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று 2025ஆம் ஆண்டிற்கான படைவீரர் கொடிநாள் நிதி வசூல் உண்டியலில் பணம் போட்டு மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் தமிழ்நாடு முன்னாள் படை வீரர் நலத் துறை சார்பில் வழங்கப்படும் நிதி உதவிகள் பற்றியும் எடுத்துரைத்தார். பின்னர் படை வீரர்களின் குடும்பத்தினருக்கு நல திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் இறுதியில் படைவீரர்களின் குடும்பத்தினருடன் தேநீர் விருந்து அருந்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் நாராயணன், வாருவாய் கோட்டாட்சியர் வரதராஜன், முன்னாள் படைவீரர் நல அலுவலக அமைப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் படைவீரரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

admin
