நீட் தேர்வை குறித்து அதிமுக சட்டபேரவையில் பேச வேன்டும் அமைச்சர் துரைமுருகன்!

நீட் தேர்வை குறித்து அதிமுக சட்டபேரவையில் பேச வேன்டும் அமைச்சர் துரைமுருகன்!

ஜி.கே.சேகரன்,

நீட் தேர்வை குறித்து அதிமுக சட்டபேரவையில் பேச வேன்டும்,   முல்லை பெரியாறு மற்றும் மேகதாதுவுக்கு தான் கண்டனம் தெரிவிக்கிறது தமிழக அரசு பிறகு எதற்கு கண்டன தீர்மானம்  நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

 வேலூர்மாவட்டம்,சேவூரில் பாண்டியன்  கால்வாய் ரூ.6. 32 கோடியில் காங்கேயநல்லூரிலிருந்து அம்முண்டி வரையில்  அகலப்படுத்தியும் ஆழப்படுத்தியும் தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடந்தது.

  இதில் தமிழக நீர் வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு திறந்து வைத்து மக்களுக்காக அர்பணித்தார்.

  இதில் காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் துணை மேயர் சுனில் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

 இதன் பின்னர் காட்பாடியில் தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் கணவு இல்ல திட்டம் 787 நபர்களுக்கு கணவு இல்லம் கட்டுவதற்கான அரசாணைகள் வழங்கும் விழாவும் நடந்தது.

  இதில் பயனாளிகளுக்கு அரசாணைகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கி பேசுகையில், தொடர்ந்து தான் காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்று வருவதால் சாலை விரிவாக்கம் பல்கலைக்கழகம் மருத்துவமனைகள் நீதிமன்ற வளாகம் வட்டாட்சியர் அலுவலகம் எனபல திட்டங்களை கொண்டு வந்தேன்.

 இதே போல் விவசாயிகள் பயனடைய வேண்டுமென பாண்டியன் மடகு திட்டத்தை செயல்படுத்தியுள்ளேன் இதனால் சுற்றுவட்டார கிராமங்கள் பயன்பெறுவார்கள் என்றார்.

 பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மேகாது அணைக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க மத்திய அரசு வழங்கியுள்ளது, அதனை ரத்து செய்ய தமிழக அரசு ஏன் கோரவில்லை என்று கேட்ட போது கர்நாடகா பணம் கட்டி திட்ட மதிப்பீடு அனுமதி வாங்கியுள்ளனர்.

   அதனால் நமக்கு என்ன மத்திய அரசாங்கம் அனுமதி கொடுத்தார்கள் ஆனால் 4 கமிட்டிகளில் மேகதாதுவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கர்நாடகாவின் கோரிக்கையை ஏற்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர்.

சுற்றுசூழலும் மத்திய நீர் வளத்துறையும் அனுமதியை வழங்கவில்லை மேலும் தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகா மேகதாது அணையை கட்ட முடியாது.  அது பெரிய பிரச்சனை.

  எதிர்க்கட்சிகள் மேகதாது விவகாரத்திற்கும் முல்லை பெரியாறு விவகாரத்திற்கும் ஒரு கண்டன தீர்மானம் கூட கொண்டு வரவில்லை என கூறுவது குறித்து கேட்டதற்கு நாங்கள் வழக்கில் இருக்கிறோமோ நாங்கள் ஏன் கண்டன தீர்மானம் கொண்டு வரவேண்டுமென கூறினர்.

இதே போல் நீட் விவகாரம் குறித்து தைரியம் இருந்தால் அண்ணா திமுக  சட்டசபையில்  பேசட்டும் என கூறினார்.