வெல்ஃபேர் கட்சியின் சேவை!

ஜே. அருண் ஹென்றிக்ஸ்

கோவை கரும்புக்கடை, ராஜ வாய்க்கால் சீரமைப்பில் வெல்ஃபேர் கட்சி.

கரும்புக்கடை, ராஜவாய்க்கால் தூர்வாரப்பட்டு சீரமைக்கும் பணிக்காக வெல்ஃபேர் கட்சி தொடர்ந்து செயலாற்றி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஃபாத்திமா நகர் பகுதியில் வாய்க்காலில் உள்ள குப்பைகளை அகற்றி, தூர்வாரல் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி.சபீனா அவர்கள்

முறையிட்டிருந்தார். அதை தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் கரும்புக்கடை  பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர்.  விரைவாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்கள்.

இந்நிகழ்வில்  திருமதி.சபீனா  மற்றும் மாவட்ட செயலாளர் திரு.அப்பாஸ் அவர்கள் உடன் இருந்தனர்.