திருவண்ணாமலையில் டைடல் பூங்கா! ஓராண்டில் இயங்கும்!

ம.பா.கெஜராஜ்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் மினி டைடல் பூங்காக்களை அமைக்க அரசு டெண்டர் கோரியிருக்கிறது. திட்டமிட்டுள்ளது. இப்படி பூங்காக்களை அமைப்பதன் மூலம் ஐடி துறையில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, வர்த்தக மற்றும் தொழில் துறை மானியக் கோரிக்கையின்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று சொன்னார்.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் இந்த மினி டைடல் பூங்கா அமைப்பதற்கான வரைபடம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. திட்டத்தை நிர்வகிக்க ஆலோசகர்களை நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் அமைக்கப்படும் மினி டைடல் பூங்கா ரூ.34 கோடி செலவில் கட்டப்படும் என்றும் இது 4 தளங்களைக் கொண்டிருக்கும் எனவும் ஓராண்டில் கட்டுமானப் பணிகள் அனைத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பூங்கா அமைப்பதற்கான டெண்டரை தற்போது வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலையில் மினி டைடல் பூங்கா கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரப்பட்டுள்ளதால் விரைவில் இந்த பணிகள் அனைத்தும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருவண்ணாமலை மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.