ஓட்டு இயந்திரங்கள் இப்பவே தயார்!
ஜி.கே.சேகரன்,
தெலுங்கானாவிலிருந்து மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் கண்ட்ரோல் யூனிட் 775 பைலட் யூனிட் 3595 .வேலூர் வந்தது.
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் இருப்பு வைக்குமாறு தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தெலுங்கானா மாநிலத்திலிருந்து மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் லாரி மூலம் கொண்டு வரப்பட்டது.
இங்கு நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போதே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் பைலட் யூனிட் 3595, கண்ட் ரோல் யூனிட் 775 அங்கிகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறக்கி கிடங்கில் பத்திரமாக வைக்கப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார் அவருடன் வருவாய் கோட்டாச்சியர் பூங்கொடி உடன் இருந்தார்.