ஜீப்பு வேண்டுமா?
க.பாலகுரு,
திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிரிவு அலுவலக பயன்பாட்டில் இருந்த தற்போது முதிரிந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட ஜீப்பு எண். TN 09 G 0584 - ஐ ஏலம் விட உத்தேசிக்கப்பட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியரகம், மூன்றாம் தளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிரிவு அலுவலகத்தில் 26.12.2022 அன்று மாலை 3 மணியளவில் ஏல அலுவலர் முன்னிலையில் ஏலம் நடைபெறும்.
ஏலம் கோருபவர் ஏல நிபந்தனைகளுக்குட்பட்டு கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகம், சத்துணவு பிரிவு அலுவலகத்திற்கு ( அலுவலக நேரத்தில் காலை 10.00 முதல் மாலை 5.45 மணி வரை) நேரில் விவரங்களை பெற்றுகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.