இளம் பெண் இறப்பில் சந்தேகம்!

இளம் பெண் இறப்பில் சந்தேகம்!

ஜி.கே.சேகரன்,

 வாணியம்பாடி அருகே திருமணமாகி 4 ஆண்டுகளான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் திம்மாம்பேட்டை காவல்துறையினர்  விசாரணை.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த  நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரகுமார். இவர் வாணியம்பாடியில் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வரும் நிலையில்இவருக்கு பவித்ரா என்பவருடன் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது.

  இந்த தம்பதிக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். அப்படியிருக்க இன்று காலை  பவித்ரா வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திம்மாம்பேட்டை காவல்துறையினர் பவித்ராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பவித்ராவின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது  உறவினர்கள் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆன நிலையில் சம்பவம் தொடர்பாக வாணியம்பாடி  வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.