வேலூரில் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை!
கு.அசோக்,
கஞ்சா விற்பனை கும்பலை பற்றின தகவலை போலீசுக்கு தெரிவித்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வேலூர்மாவட்டம்,வேலூர் எஸ்,எஸ்.கே மாணியம் பகுதியை சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் அசோக்குமார். இவர் கஞ்சா விற்பனையாளர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள் 24-5-2018 ஆம் ஆண்டு அசோக்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இதுகுறித்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரியில் மகிளா நீதிமன்ற விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் குற்றவாளியான அதே பகுதியை சேர்ந்த திருமலை என்பவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் மூன்று மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த கொலையில் தொடர்புடைய ரமேஷ் அப்போது சிறார் என்பதால் வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது இதனால் திருமலை பலத்தபாதுகாப்புடன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

admin
