ஊராட்சி செயலரை பணி செய்ய விடாமல் தடுத்ததால் தர்ணா!
ஜி.கே.சேகரன்,
ஊராட்சி செயலரை பணி செய்ய விடாமல் தடுத்து அலுவலகத்தை பூட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வரும் ஊராட்சி மன்ற தலைவர். மன்ற அலுவலக முன்பாக அமர்ந்து பாதிக்கப்பட்ட செயலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இவர் வடகரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பணி முடித்து வீடு திரும்பிய போது ஆட்டோ மோதி விபத்தில் சிக்கினார்.
காலில் பலத்த படுகாயமடைந்து அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி¢ கடந்த மூன்று நாட்களாக பணிக்கு வருகிறார்.
அப்போது அவரை ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி சிவகுமார் பணி செய்ய விடாமல் தடுத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி அராஜகத்தில் ஈடுபட்டார்.
மேலும் பணி மாற்றம் செய்து செல்ல வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் அதிகாரத்தை கையில் எடுத்து கொண்டு ஊராட்சி செயலரை அலட்சியப்படுத்து வருதாகவும் கடந்த மூன்று மாதங்களாக அவருக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திமுக எம்.எல்.ஏ வில்வநாதனிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்து ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக ஊராட்சி செயலர் சுப்பிரமணி தொடர்ந்து 5 மணி நேரத்துக்கு மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னா அவர் சமாதானமாகி¢ அலுவலகத்தை திறந்து வைத்த பின் பணியை தொடங்கினார் மேலும் தான் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

admin
