தனியார் நிர்வாகத்திற்கு ஆதரவான அரசாணை எண் 367 ஐ ரத்து செய்ய கோரிக்கை!

தனியார் நிர்வாகத்திற்கு ஆதரவான அரசாணை எண் 367 ஐ ரத்து செய்ய கோரிக்கை!

 கு.அசோக்,

  2025 ஆம் ஆண்டு ஊதிய உயர்வை 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு பெற்றுத் தராமல் தனியார் நிர்வாகத்திற்கு ஆதரவாக அரசாணை எண் 367 வெளியிட்டிருக்கும் தமிழக அரசை கண்டித்து 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

  இராணிப்பேட்டை மாவட்டம், முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது:- தமிழக முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை பப்ளிக் பிரைவேட் ரிலேஷன்ஷிப் என்ற முறையில் அரசு மற்றும் தனியார் கூட்டு பங்கேற்பு அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் இ.எம்.ஆர்.ஐ.,ஜி.எச்.எஸ். என்ற தனியார் நிர்வாகத்தின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

  இந்த நிலையில் தமிழக முழுவதும் உள்ள 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 2025 ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  இதற்கு தமிழக அரசு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் இ.எம்.ஆர்.ஐ.  ,ஜி.எச்.எஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் வகையில் அரசாணை எண் 367-யை வெளியிட்டு இருப்பது தனியார் நிர்வாகத்தின் சட்ட விரோதத்திற்கு ஆதரவாகவும் மற்றும் தொழிலாளர் விரோத போக்கிற்கு துணை போவதாக ஆகும்.

  ஆகவே தமிழக அரசை கண்டிப்பதாகவும், மேலும் மாவட்ட முழுவதும் இரவு நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை பெரும்பாலும் இயக்கப்படாமல் செலவீன தொகைகளை குறைத்து அடுத்த ஆண்டுகளில் மீண்டும் ஒப்பந்தத்தை பெரும் நோக்கில் செயல்படுவதால் கிராமம் மற்றும் நகரம் சேர்ந்த மருத்துவ தேவைப்படும் அவசர மருத்துவ பயனாளிகள் 108 ஆம்புலன்ஸ் சேவையை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் எனவே 24 மணி நேரமும் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்தையும் முறையாக பராமரிப்பு பணிகள் செய்வதற்கான நிதி ஆதாரங்களை வழங்க வேண்டும்.

  பணியாளர்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் வழங்குவதற்காக நிதியாதரத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை கண்டன கோஷங்களாக எழுப்பி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.       இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் யோகா நந்தன் தலைமை வைத்திருந்தார். மேலும் இதில் மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட செயலாளர் பொன்னரங்கம் மாவட்ட பொறுப்பாளர் சேட்டு உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர்.