கள்ளு இறக்கும் தொழிலாளர்களுடன் போலீசார் வாக்குவாதம்!

கள்ளு இறக்கும் தொழிலாளர்களுடன் போலீசார் வாக்குவாதம்!

கு.அசோக்,

 இராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள பொன்னமங்கலம் கிராமத்தில் கள் இறக்கும் தொழிலாளர்கள் தென்னை மற்று பனை மரத்தில் கள்ளு எடுப்பதற்காக பானை கட்டி உள்ளனர்.

  இந்நிலையில், கலவை காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, கலால் போலீசார் ஆகியோர் குழு உடன் சென்று பொன்னமங்கலம் கிராமத்தில் மரத்தில் கட்டிருந்த பானைகளை உடைத்து சேதப்படுத்தினர்.

   கள் எடுக்கும் தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  மேலும், கள் எடுக்காத போதே எங்கள் மீது வழக்கு ஏன் போடுவதில் என குற்றச்சாட்டு எழுப்பினர். பின்னர் ஆய்வாளர் கவிதா , கள் இறக்கும் தொழிலாளர்களை நீ என்ன கேட்பது போ என ஒருமையில் பேசியதாக தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.