உள்ளூர்வாசிகளுக்கு வேலை வழங்கவில்லை என்றால் நானே போராடுவேன்! துரைமுருகன் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
காட்பாடி பகுதியில் துவங்கபடும் சிப்காட் 10 பேரில் 7 பேருக்கு இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்கவில்லை என்றால் என் தலைமையிலேயே போராட்டம் நடத்துவேன் அமைச்சர் துரைமுருகன் பேச்சு - டெங்கு காய்ச்சல் கட்டுபடுத்த நாளை சென்னையில் சுகாதாரத்துறை சிறப்பு கூட்டம் நடத்தபடுகிறது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி பேட்டி
வேலூர்மாவட்டம்,காட்பாடி தொகுதிக்குட்பட்ட சேர்க்காட்டில் 60 படுக்கைகள் கொண்ட ரூ.16 கோடியில் புதியதாக கட்டப்பட்ட மருத்துவமனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்நிலையில் சேர்க்காட்டில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி மருத்துவமனையை துவங்கினார்கள்.
இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் அமுலு.கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்
விழாவில் பேசிய நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிப்காட் பகுதியில் புதியதாக துவங்கபடவுள்ள சிப்காட்டில் இப்பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் 10 பேரில் 7 பேருக்கு வேலைக்கு அளிக்க வேண்டும் இல்லையேல் என் தலைமையில் போராட்டம் நடத்தபடும்.
மேலும் இம்மருத்துவமனை விரிவாக்கம் செய்யபடவுள்ளது என பேசினார். இவ்விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணி கலந்துகொண்ட நிலையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
சுகாதாரத்துறை மக்கள் நலன் அக்கறையுடன் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் இதய நோய் ஏற்படாமல் 40 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறையில் காலியாக இருந்த மருத்துவர் மற்றும் மருத்துவர் அல்லாத பணியிடங்கள் முழுமையாக நிரப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதாரநிலையங்களில் நாய் கடி பாம்பு கடிக்கு மருந்துகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
தற்போது பருவ மழை காலம் என்பதால் டெங்கு காய்ச்சலை தடுக்க நாளை சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறப்பு கூட்டங்கள் நடக்கிறது.
இதில் டெங்குகாய்ச்ச்சலை தடுக்கும் வழிமுறைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளோம் இருமல் மருந்து குழந்தைகள் பாதிக்கபடுவதால் அதனை விற்க கூடாது என தடைவிதித்துள்ளோம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரமில்லை என சொன்னார்.
இராணிப்பேட்டை,

அதே போல், இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஒன்றியம் பானாவரம் ஊராட்சியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஐந்து நபர்களுக்கு வீட்டுவசதி கழகமான தாட்கோ மூலம் 25 லட்சத்து 35 ஆயிரம் ருபாய் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டது.
இந்த வீடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கைத்தறி மற்றும் துணி துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
புதிய வீடுகளை பார்வையிட்டதுடன், இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா, சோளிங்கர் எம்எல்ஏ. ஏ. எம். முனிரத்தினம், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசீகாமணி, ஒன்றிய குழு உறுப்பினர் அனிதா, ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜீனன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவபிரகாஷம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

admin
