கலங்கிய நீரை நீங்க குடிப்பீங்களா ஆபிசர்!
கு.அசோக்,
பானாவரத்தில் குடிநீர் கலங்கலாகவும் சேரும் சகதியுமாக வழங்கியதை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட யாதவா தெரு, பஜார் தெரு, கம்மார் தெரு, கோகுல் நகர் ஆகிய பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் கலங்கலாகவும் சேரும் கலந்து வந்துக் கொண்டிருக்கிறது.
அதை எதற்குமே பயண்படுத்த முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் அளிக்க வந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் அதை கண்டு கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 100 க்கும் மேற்பட்ட பொதுக்கள் குடங்களில் கலங்கிய தண்ணீரை முன் வைத்து முறையாக நல்ல குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை ஈட்டனர்.
அத்துடன் இந்த தண்ணீரை நீங்க குடிப்பீங்களா என்று அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டனர்.
தகவல் அறிந்த காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாஷம் மற்றும் பானாவரம் போலீசார் பொது மக்களிடையே சமரசத்தில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரம் போரடித்ததுக்கு பிறகு அப்பகுதியில் ஆய்துளை கினறு அமைத்து குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்ததின் பெயரில் பொதுமக்கள் கலைந்துச் சென்றனர்.

admin
