தொழிற்பேட்டை இடத்தை மாற்றிடு...இலையேல்?!

தொழிற்பேட்டை இடத்தை மாற்றிடு...இலையேல்?!

ஜி.கே.சேகரன்,

 200 வருடம் குடியிருந்து விவசாய செய்து வரும் எங்களை வெளியேற்றாதே என தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  

  திருப்பத்தூர் மாவட்டம், தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட தொழில் பேட்டை ஆனது விவசாய நிலங்களில் நிர்ணயிக்கப்பட்டதால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாகவும் அப்பகுதி பொதுமக்களும் நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதைப்போலவே, கோயான் கொள்ளை வட்டம், புள்ளநேரி வட்டம், முத்துரான் வட்டம், வேலமரத்து வட்டம் நாடார் வட்டம், பத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளில் தமிழக இராசா கொண்டு வரப்பட்ட தொழிற்பேட்டையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி போராட்டம் நடத்தினா.

   ¢மேலும் 200 வருடத்திற்கு மேலாக பகுதியில் குடியிருப்புகளிலும் விவசாயங்கள் செய்து வரும் எங்களுக்கு போல் தொழில் பேட்டை அமைந்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் தினமும் பொங்கினர்.

  பின்பு ஏற்கனவே உள்ள ஆம்பூர் வட்டம் விண்ணமங்கலம் தொழில் பூங்கா வட்டாரத்திலேயே தொழில் பேட்டையை அமைக்க வேண்டும் எனவும், மேலும் மல்ல குண்டா நீர்வரத்திற்கு வரும் ஆக்கிரமிப்பு கால்வாய்களை உடனடியாக அகற்றிட வேண்டும்

 என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனார்

  தமிழக அரசு உடனடியாக தொழிற்பாட்டியை வேறு இடத்திற்கு மாற்ற இல்லையென்றால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவோம் என தெரிவித்திருக்கிறார்கள்.