இரட்டைக் கண் சுரங்கபாதை! அதிமுகவின் தேர்தல் கால போராட்டம்!
கு.அசோக்,
அரக்கோணத்தில் அமைந்துள்ள இரட்டைக் கண் சுரங்கபாதையை அகலப்படுத்தியும் உயர்த்தியும் தரக்கோரி மத்திய மாநில அரசுகளுக்கு போராட்டம் வாயிலாக அதிமுக கோரிக்கை.
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனி பேட்டை மற்றும் மார்க்கெட் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இரட்டை கண் ரயில்வே சுரங்க பாதை நாளடைவில் மழைநீர் சூழ்ந்து வெளியேற வழி இல்லாமல் தேங்கி நிற்கும் இடமாக மாறியிருக்கிறது.
ஆகையால் அதில், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவில் மாறிவிட்டது.எனவே ரயில்வே நிர்வாகம் உடனடியாக சுரங்கப்பாதை அகலப்படுத்த வேண்டும் என்றும் மேலும் சுரங்கப் பாதையை உயர்த்தி தர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்தக் கோரிக்கையை தொடர்ந்து அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இரட்டைக் கண் சுரங்க பாதையை அகலப்படுத்தி தரவேண்டும் அல்லது உயர்த்தி தர வேண்டும் அல்லது மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என கண்டன போராட்டம் வாயிலாக மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆர்பாட்டத்தில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இதனால் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் ஐயையோ காணோமே கரண்ட் காணோமேளென கோஷங்களை எழுப்பினர்.
குறிப்பு:-
அரக்கோணம் பகுதியில் நகரத்தை இரு வேறு பகுதிகளாக பிரிக்கும் வகையில் அமைந்துள்ள ரயில்வே இரட்டை கண் சுரங்கப்பாதை நாளடைவில் பொதுமக்கள் பயன்படுத்தும் போது பெரிதும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனை போக்கும் விதமாக உடனடியாக மழை நீரானது சுரங்கப் பாதைக்குள் தேங்காத வகையில் சுரங்கப்பாதை உயர்த்தி தரவேண்டும் அதேபோல் அகலப்படுத்தி அல்லது மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என தேர்தல் சீசனில் அதிமுகவினர் போராட்டம் நடத்துவார்கள்.

admin
