சாமியோவ்… இந்த இடத்திலா நாங்க வாழனும்!
கு.அசோக்
ஆற்காடு பேருந்து நிலையம் அருகே 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் என மக்கள் வசித்து வந்த நிலையில் அப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தற்போது நரிக்குறவர் இனத்தை சார்ந்த குடும்பத்தினருக்கு சக்கர மல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னிகா தோப்பு பகுதியில் அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த இடம் தற்போது மணல்கள் தோண்டப்பட்டு குண்டும் குழியும் ஆகவும் சதுப்பு நிலமாகவும் காட்சியளிப்பதால் அப்பகுதியில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அரசு இலவச வீட்டு மனை பெற்ற பயனளியான நரிக்குறவர் குடும்பத்தினர் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இருந்த பேருந்து நிலையமே போதுமான வசதியுடன் இருந்ததாகவும் ஆனால் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில் அவ்விடத்தில் வாழ முடியாத நிலையே உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகத்தினர் அவ்விடத்தினை சீரமைத்து அரசு தொகுப்பு வீடுகள் மற்றும் மின்சார வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கியுள்ளனர்.

admin
