யாருக்கு எத்தனை சீட்? அதிமுக - பா.ம.க.அன்புமணி டீம் கூட்டணி ஒப்பந்தம்!

யாருக்கு எத்தனை சீட்? அதிமுக - பா.ம.க.அன்புமணி டீம் கூட்டணி ஒப்பந்தம்!

ம.பா.கெஜராஜ்,

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்தும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈபிஎஸ்சை அன்புமணி நேரில் சந்தித்து பேசி கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

 அதிமுக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துள்ளது.

அமித்ஷா தமிழகம் வந்த நிலையில் அவரை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கவில்லை என்கிற செய்தியை பூதாகரமாக ஊடகங்கள் சித்தரித்து வந்த நிலையில், தற்போது பா.ம.கவின் ஒரு டீமான அன்புமணி தலைமையிலான குழு என்.டி.ஏ.கூட்டணியில் இணைந்திருக்கின்றன.

 எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், அவரது பசுமை வழிச்சாலை இல்லத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

 பின்னர் எடப்பாடி பழனிச்சாமியும், அன்புமணியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

 பழனிச்சாமி தெரிவிக்கையில், மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணைவார்கள்.

இயற்கையாக அமைந்த கூட்டணி அதிமுக-பாமக கூட்டணி.

யாருக்கு எத்தனை தொகுதி என்று பேசி முடிவெடுத்துவிட்டோம். அந்த தகவலை பின்னர் தெரிவிப்போம்.

திமுக அரசை தூக்கி எறிந்து அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

எங்களது கூட்டணி வெற்றிக்கூட்டணி என்றார்.

 அவரைத்தொடர்ந்து பேசிய அன்புமணி,

பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணி அமைந்துள்ளது.

மக்கள் விரோத திமுக கூட்டணியை அகற்றுவதற்காக அதிமுகவுடன் கைகோர்த்துள்ளோம்.

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெருவாரியான தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என்றார்.

என்.டி.ஏ.வில் சேர்ந்திருக்கும் பாமக ஏ.டீமா? அல்லது பி டீமா?