தேமுதிக வுக்கு வலைவீசும் திமுக மற்றும் அதிமுக!

தேமுதிக வுக்கு வலைவீசும் திமுக மற்றும் அதிமுக!

 ம.பா.கெஜராஜ்,

 தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதன்படி, தேமுதிக தலைமை நிர்வாகிகளிடம் அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியும், பாஜக தரப்பில் மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

அப்போது, தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் மதுரை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மக்களவைத் தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் தேமுதிக தரப்பில் அதிமுக, பாஜகவுக்கு வழங்கியதாகத் கூறப்படுகிறது.

 இந்நிலையில், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் திமுக தரப்பிலும் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் தேமுதிக தலைமையைத் தொடர்பு கொண்டு கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முயன்றதாக சொல்லப்படுகிறது.