கொத்து கொத்தாய் மனித உடல்கள்! விபத்துக்கு காரணம் யார்!

கொத்து கொத்தாய் மனித உடல்கள்! விபத்துக்கு காரணம் யார்!

ம.பா.கெஜராஜ்,

 நேற்றிரவு ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் கோர மண்டல் மற்றும் பெங்களூரு ரெயில்களின் பெட்டிகள் அருகில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயிலுடன் மோதி நொறுங்கின. 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதியதால் பெரிய சத்தம் ஏற்பட்டது.

 தகவலறிந்ததும் தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உள்ளூர் மக்கள் துணையுடன் மீட்புப் பணியை தொடங்கினர். மீட்கப்பட்ட பயணிகள் பாலசோர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சோரோ கோபால்பூர் மற்றும் காந்தா படா பகுதிகளில் அமைந்து உள்ள மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 தென்கிழக்கு ரெயில்வே அதிகாரிகள் பேட்டி,

இன்று மதியம் 12 மணியளவில் தென்கிழக்கு ரெயில்வே அதிகாரிகள் நிருபர்களிடம் கூறுகையில், '3 ரெயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது' என்று தெரிவித்தனர். இதற்கிடையே சுமார் 900 பயணிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 650 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தென்கிழக்கு ரெயில்வே செய்தி தொடர்பாளர் ஆதித்ய சவுத்ரி தெரிவித்தார்.

  எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

காயம் அடைந்த 900-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பாக பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து அறிந்ததும் மருத்துவமனை நிர்வாகிகள் படுக்கை எண்ணிக்கைகளை அதிரிகத்தனர். இருந்தாலும் ஒரே நேரத்தில் ரத்தம் சொட்ட சொட்ட, கை கால்கள் இழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதால் மருத்துவமனை போர்க்கள பகுதி போன்று காட்சியளித்தது.

தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர்.

  ரெயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து விபத்து நடைபெற்ற பகுதிக்கு ஹெலிகாப்டரில் வந்தடைந்தார். விபத்து நடந்த பஹானாகா பஜார் ரெயில் நிலைய பகுதியை பிரதமர் மோடி பார்வையிட்டார். பிரதமர் மோடியுடன் ரெயில்வே அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

 ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது; விபத்தால் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க அரசு உதவும் . ரயில் விபத்துக்கான காரணத்தை கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும்; தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் விபத்து நடந்த பாதையில், ரயில் போக்குவரத்தை சீர் செய்ய ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்"

 867 பயணிகள் சென்னை வர முன்பதிவு செய்துள்ளனர்.

 ரெயில் விபத்து குறித்து சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- விபத்துக்குள்ளான கோரமண்டல் ரெயிலில் 867 பயணிகள் சென்னை வர முன்பதிவு செய்துள்ளனர். அதிகாரிகளுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் குறித்து கேட்ட றிந்து வருகிறோம். சென்ட்ரல் விசாரணை மையத்திற்கு ஆயிரத்திற்கும் மேலான போன்கள் வந்துள்ளன. உறவினர்களுக்கு உரிய தகவல், விவரங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நூற்றாண்டின் பெரிய ரெயில் விபத்து மம்தா பானர்ஜி

  மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி. அதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- இந்த நூற்றாண்டின் இந்தியாவில் மிகப்பெரிய ரெயில் விபத்து இது. பலியானோர் எண்ணிக்கை உயரலாம். ரெயில்வே துறை உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவாக அறிவித்துள்ளது. நாங்கள் மேற்கு வங்காள மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க இருக்கிறோம். வேலை முடியும் வரை மேற்கு வங்காள மக்கள் ரெயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் இணைந்து வேலை செய்வார்கள்'' எனத் தெரிவித்தார்.

  விபத்துக்கான காரணம்.

 இந்த கோர விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனிதத் தவறா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எழுப்பப்படும் கேள்விகள்:- 1. அனைவருடைய பார்வையிலும் ஒரே இடத்தில் அடுத்தடுத்த விபத்து, அதுவும் மூன்று ரெயில்கள் ஒரே இடத்தில் மோதியது எப்படி? என்பதுதான். 2. சரக்கு ரெயில் நின்று கொண்டிருக்கும்போது, அதே ரெயில்பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்தது எப்படி?. இது தொழில்நுட்பக் கோளாறா? அல்லது மனிதத்தவறா? 3. பலர் சிக்னல் தவறு என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 4. ரெயில்வே அமைச்சகம் விபத்துகளை தடுப்பதற்கான 'கவாச்' சிஸ்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரெயில் சிக்னலை தாண்டும்போது, மோதலுக்கான வாய்ப்புகள் இருக்குமெனில் எச்சரிக்கை தகவலை அனுப்பும். அப்போது எதிரே வரும் ரெயிலை அறிந்து டிரைவர் சுதாரித்துக் கொண்டு பிரேக் மூலம் ரெயில்களை நிறுத்த முடியும். இப்படி இருக்கும்போது 3 ரெயில்கள் எப்படி ஒரே இடத்தில் மோதியது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.