விவசாயிகளைக் கூடவா அலைகழிப்பீங்க!

கு.அசோக்,
அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்தவர்களுக்கு பல மாதங்களாக பணம் பட்டுவாடா செய்யப்படாமல் இருப்பதை கண்டித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இராணிப்பேட்டை மாவட்டம், மூதூர் மற்றும் வளர்புரத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது.
இந்த கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த நெல்லை விற்பனை செய்தனர். ஆனால் அதற்குண்டான பணத்தை பல மாதங்களாக அரசு விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பல தடவை கேட்டும் எந்தவித பதிலும் இல்லை. இதில் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயிகள் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகளுக்கான பணத்தை விரைந்து வழங்காவிடில் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் மணி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரசு அதிகாரிங்க, அரசாங்கம் தங்களுக்கு அளிக்கும் சலுகைகளை அந்த பில் இந்த பில் என்று போட்டு எடுத்து மகிழ்கிறார்கள். அது போதவில்லை என்று போராட்டமும் நடத்துகிறார்கள். ஆனால் நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகள் வயிற்றில் மண்ணை போடுகிறார்கள்.
கேடு கெட்டவர்கள்.