பக்கத்து வீட்டுக்குள் எகிறி குதித்த போலீஸ்காரர்!

ம.டெல்லிராஜன்,
சமீபகாலமாக போலீசாரின் அத்து மீறல்கள் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், சம்மந்தப்பட்டவர்களை உயர் அதிகாரிகள் காப்பாற்றுகிறார்களே தவிர, நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் இது போன்ற ரவுசு கலாச்சாரத்தில் ஒரு சில போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் நேற்று இரவு (புதன்) திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், வேலன் நகரில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவுக்குள் புகுந்த ஒரு போலீஸ்காரர் குடிபோதையில் கலாட்ட செய்து அவருக்கு சம்மந்தப்பட்டவரின் பக்கத்து வீட்டுக்குள் எகிறி குறித்துள்ளார்.
இதனால் அப்பகுதி மக்கள் கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் தாமதமாக அங்கு வந்து சேர்ந்துள்ளனர் போலீசார்.
அப்பொழுது அங்கு கலாட்டா செய்து கொண்டிருந்த போதை போலீஸ்காரரை பார்த்த கிராமிய காவலர்கள், சார் நீங்க போங்க நாளைக்கு பேசிக்கலாம் என்று பத்திரமாக அவரை வழி அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்கு கூடியிருந்த பொது மக்களை படம் பிடித்துக் கொண்ட போலீசார் கிளம்பி சென்று விட்டனர்.
நல்ல அதிகாரிகள்.