விபத்தை ஏற்படுத்த முற்பட்ட போலீசார்!

விபத்தை ஏற்படுத்த முற்பட்ட போலீசார்!

ஜி.கே.சேகரன்,

 வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் காலை முதல் காட்பாடி சித்தூர் பகுதிகளுக்கு செல்லும் லாரிகள் காலை 9 மணி முதல் நீண்ட வரிசையில் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டதால் லாரி ஓட்டுநர்கள் அவதிபட்டனர். கேள்வி எழுப்பிய வாகன ஓட்டிகளை காவல்துறையினர் மிரட்டினார்கள்.

 வேலூர்மாவட்டம், வேலூரில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்கமும் காலை 9 மணி முதல் லாரிகள் பல கிலோமீட்டர் தூரம் நிறுத்தப்பட்டுள்ளது.

   காட்பாடி மார்கமாக சித்தூர் செல்லும் அனைத்து லாரிகளும் அப்பகுதியில் அனுமதிக்கபடவில்லை துணை முதல்வர் உதயநிதி காட்பாடியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதும் பின்னர் அனுகுலாஸ் ஓட்டலில் நடக்கும் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொள்வதும் அதன் பின்னர் பேபி திருமண மண்டபத்தில் ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளவும் வந்திருந்தார்.

   இதனை காரணம் காட்டி காவல்துறையே திடீரென அப்பகுதியில் எந்த வித முன் அறிவிப்புமில்லாமல் காலை 9 மணி முதல் இன்னும் தொடர்ந்து தற்போது வரையில் சாலையின் இரு மார்கங்களிலும்  பல கிலோமீட்டர் தூரத்திற்கு லாரிகள் அணிவகுத்து நிறூத்தி வைக்கப்பட்டது.

  இதில் லாரி ஓட்டுநர்களையும் போக்குவரத்து காவல்துறையினர் மிரட்டுவதாக புகார் எழுந்தது.

 மேலும்,  தேசிய நெடுஞ்சாலையில் இரு மார்கங்களிலும் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டதால் தேசியநெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும் வேதனை அடைந்துள்ளனர்.

   இதை எதிர்கட்சிகள் வேடிக்கைமட்டுமே பார்த்தன.