வருண்குமார் ஐபிஎஸ்:- சீமான் மீது தொடர்ந்த வழக்கு புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! உயர்நீதிமன்றம் உத்தரவு!

அ.கார்த்தீஸ்வரன்,
திருச்சி சரக டிஐஜியாக உள்ள வருண்குமார் எஸ்பியாக இருந்த போது அவர் குறித்து சமூக வலை தளங்களில் நாம் தமிழர் கட்சியினர் சில கருத்துகளை பதிவிட்டனர்.
ஆகவே சீமானுக்கு எதிராக திருச்சி 4-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் டிஜஜி வருண்குமார் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி சீமான் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, சென்னையில் நான் செய்தியாளாகளிடம் பேட்டியளிக்கும்போது, வருண்குமாரின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்தேன்.
அதற்காக எனக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் டிஜஜி வருண்குமார் என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என நீதித்துறை நடுவரை கேட்டுக்கொண்டேன்.
என்னுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஒரு காவல் அதிகாரி போல் செயல்படாமல், அரசியல்வாதி போல் செயல்பட்டு பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் நாம் தமிழர் கட்சி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.
காவல்துறையில் பணிபுரிபவர்கள் அரசியல் தலைவாகளின் தனிப்பட்ட கருத்து களில் தலையிடவோ, குறுக்கிடவோ உரிமையில்லை.
மனுவில் வருண்குமார் கூறியபடி அவர் மீது நான் எந்த அவதூறு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை. இதனால் திருச்சி நீதிமன்றத்தில் எனக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதி எல்.விக்?டோரியா கவுரி விசாரித்தார். பின்னர் நீதிபதி, திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சீமானுக்கு எதிரான அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், டிஜஜி வருண்குமார் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஆக.4-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
தன்னுடைய அதிகாரத்தை மீறி சோஷியல் மீடியாவை பயன்படுத்தி வந்த காவல் அதிகாரி தேவையில்லாம் இந்த சர்ச்சையில் சிக்கி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயன்றுள்ளார் என்பதே சாமன்யர்களின் கருத்து.