என்ன செய்ய போகுது ராமதாஸ் சசிகலா கூட்டணி! அதிமுக கூட்டணி வாக்குகளை சிதறடிக்குமா?
ம.பா.கெஜராஜ்,
பாமக நிறுனவர் மருத்துவர் ராமதாஸ், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா இணைந்திருக்கும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்திருக்கிறார்.
இணைந்த கையோடு சசிகலா தரப்பில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களிடம் மனுக்கள் வாங்கப்பட்டது. இதனால் போயல் தோட்டம் பரபரப்பாகியது.
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து அதன் பொதுச்செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்ட சசிகலா, கடந்த 10-ம் தேதி ராமதாஸை சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் நேற்று மாலை தைலாபுரத்தில் நடைபெற்ற ராமதாஸ் - சசிகலா சந்திப்புக்குப் பிறகு, பாமக-வும் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவிருப்பதாக ராமதாஸ் மகிழ்வுடன் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ராமதாஸும் சசிகலாவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது "ராமதாஸுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறோம்" என்று சசிகலா ஒற்றை வரியில் முடித்துக் கொண்டார்.
அப்போது பேசிய ராமதாஸ், "அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது என முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளோம். இக்கூட்டணி வெற்றிக் கூட்டணி. இது மிகப்பெரிய வெற்றியை பெற்று, தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இதனால் பலருக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நாங்கள் 234 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிட உள்ளோம். கொள்கை அளவில் உறுதியாக இருக்கும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம். விருப்பம் தெரிவிப்பவர்களை இணைப்பது குறித்து அம்மையார் சசிகலாவுடன் இணைந்து முடிவு செய்யப்படும்.
தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி அமைப்பதில் தாமதம் ஏற்படுவது, சில நேரங்களில் நடக்கும்" என்று சொன்னார்.
இந்த சந்திப்பின் போது சசிகலாவுக்கு பக்கத்தில் மருத்துவர் ராமதாஸ் ஒரு பக்கமும், மறுபுறம் அவரது மனைவி சரஸ்வதி அம்மாளும் அமர்ந்திருந்தனர்.
தற்போது ஐந்தாவது அணியாக உருவெடுத்திருக்கும் ராமதாஸ் சசிகலா கூட்டணி இந்த தேர்தலில் என்ன செய்யப்போகுது என்றூ அனைவரும் உற்று நோக்கி வருகிறார்கள். அதிமுக கூட்டணியின் வாக்குகளை பிரிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டும் தான் நடக்கும்.

admin
