உறவினர்களால் பறி போதும் சீட்! சந்தன மாவட்ட சிட்டிங் எம். எல். ஏ. பறிதவிப்பு!

 உறவினர்களால் பறி போதும் சீட்! சந்தன மாவட்ட சிட்டிங் எம். எல். ஏ. பறிதவிப்பு!

ம.பா.கெஜராஜ்,

 சந்தன மாவட்டத்தின் முக்கிய தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ- மீது கட்சித் தலைமை கடும் அதிருப்தியில் இருக்கிறதாம். ஆளும் கட்சி எம்எல்ஏ-வாக இருக்கும் போதே அவரது அண்ணன் சாதியின் பெயரால் தனியாக கட்சி தொடங்கி பாலிடிக்ஸ் செய்கிறாராம்.

 ஆகவே அதை சுட்டிக்காட்டிய மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர், "இந்த முறை உங்களுக்கு சீட் இருக்காதுன்னு தலைமையில சொல்லப்படுது, அதனால, யாருக்கு சீட் கொடுத்தாலும் அவங்களுக்காக வேலை பார்த்து ஜெயிக்க வைய்யா" என்று சொல்லி விட்டாராம்.

 கட்சி தலைமையினர் மாவட்டத்துக்கு வந்த போது பத்திரிகைகளில் முழு பக்க அளவில் விளம்பரங்களைக் கொடுத்த அந்த எம்எல்ஏ தனக்கு சீட் இல்லை என்ற செய்தி பரவ ஆரம்பித்தது முதலே, விளம்பரங்களின் அளவை கால் பக்க அளவுக்கு குறைத்துக் கொண்டார் என்றால் பார்த்துக் கொக்ள்ளுங்களேன்.

 இருந்தாலும் கூட பதவியை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் கடைசி முயற்சியாக சென்னையில் டேரா போட்டு கெஞ்சிக்கூத்தாடிக் கொண்டிருக்கிறாராம்.

 ஒருவேளை இந்த சிட்டிங் எம். எல். ஏ. வுக்கு சீட் கொடுக்கப்படுமாயின், கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற ஒருவர் இறந்துவிட, அவர் வங்கியில் அடமானம் வைத்த சொத்தை எம்.எல்.ஏ.வின் மாமா முறை உறவு கொண்ட நபர் பாவ்லா ஏலம் நடத்தி சுமார் 10 கோடிக்கும் மேல் சுவாகா செய்துள்ளாராம்.  

  இந்த தில்லாலங்கடி சமாச்சாரத்தை ரத்தத்தின் ரத்தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் முழுமையாக வெளிப்படுத்தவிருக்கிறாரார்களாம்.

கெட்ட தம்பிக்கு  நல்ல சகுணம்.