'எட்டு தோல்வி எடப்பாடி' போஸ்டரால் பரபரப்பு!

'எட்டு தோல்வி எடப்பாடி' போஸ்டரால் பரபரப்பு!

 ஆர்.செல்வராஜ்,

  அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எனப்படும் எடப்பாடி பழனிச்சாமியை, 'எட்டு தோல்வி எடப்பாடி' என்று சித்தரித்து நெல்லை மாவட்டத்தில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருக்கிற்றது.

  குறிப்பாக திசையன்விளை, இட்டமொழி, மன்னார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 'எட்டு தோல்வி எடப்பாடி' என்ற தலைப்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

  ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நாங்குநேரி தொகுதி அமைப்பாளர் சி.டென்சிங் சுவாமிதாஸ் பெயரில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், 'எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. வந்த பிறகு தொடர்ச்சியாக எட்டு தேர்தல்களில் தோல்விகளை சந்தித்து வருகிறது' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  மேலும் 'எட்டு தோல்வி எடப்பாடியாரே! உடனடியாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்!' என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

  அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமியின் கைகளுக்கு சென்ற பின்னர் இதுவரை 8 தேர்தல்களில் தோலிவியுற்றதாக அந்த போஸ்டரில் கீழ்கண்டவாறு விவரமாக பட்டியலிட்டுள்ளார்.

  1. 2017 ஆர்.கே. நகர் இடைத் தேர்தல். 
  1. 2019 நாடாளுமன்ற தேர்தல். 
  1. 2019-ல் நடந்த 22 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தல். 
  1. 2019-ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல். 
  1. 2021 சட்டமன்ற பீதர்தல். 
  1. 2021-ல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல். 
  1. 2022-ல் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல். 
  1. 2023 ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.