ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் 160 புதிய வீடுகள்:- அமைச்சர்கள் எ.வ.வேலு செஞ்சி மஸ்தான் பங்கேற்பு!

ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் 160 புதிய வீடுகள்:- அமைச்சர்கள் எ.வ.வேலு செஞ்சி மஸ்தான் பங்கேற்பு!

 ஆர்.ரமேஷ்,

   திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், மின்னூர் சின்னப்பள்ளிகுப்பம் கிராம இலங்கை தமிழர்களுக்காக ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் 160 புதிய வீடுகள் கட்டுமான பணிகளை மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி.கே.எஸ். மஸ்தான் அவர்கள் ஆகியோர் அடிக்கல் நாட்டி இன்று (24.11.2022) துவக்கி வைத்தார்கள்.

 இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார்.

இவ்விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.டி.எம்.கதிர் ஆனந்த்,

 திரு.சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.தேவராஜி

 திரு.அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், மின்னூர் சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் 40 பிளாக்கில் இலங்கை தமிழர்களுக்கு 300 சதுர அடி வீதம் 160 புதிய வீடுகளை ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள் அமைக்கப்பட உள்ளன. இக்கட்டடங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் ஹால், படுக்கை அறை, சமையல் அறை, கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. இப்பணிகள் 9 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ. வேலு அவர்கள், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி.கே.எஸ். மஸ்தான் அவர்கள் ஆகியோர் தெரிவித்துத்துள்ளனர்.

 இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு.கு.செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பெ.பிரேமலதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.என்.கே.ஆர்.சூரியகுமார், மாதனூர் ஒன்றிய குழு தலைவர் திரு.சுரேஷ்குமார், வட்டாட்சியர் திருமதி.மகாலட்சுமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.

 செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர்.