வேலூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை! செல் போன் ஒப்படைப்பு நிகழ்ச்சியில் எஸ்.பி.பேட்டி!!

  ஜி.கே.சேகரன்,

களவு போன மற்றும் காணாமல் போன ரூ.32 லட்சம் மதிப்புள்ள 150 செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்   - தேர்தலை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ரவுடிகளும் கைது செய்யப்படுவார்கள், தீவிரவாதிகள் நட்ட்டமாட்டம் இல்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பேட்டி

 வேலூர்மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 4 ஆம் கட்டமாக  களவு போன மற்றும் தொலைந்து போன 150 செல் போன் களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்  உரியவர்களிடம் ஒப்படைத்தா£. ¢ இதுவரையில் ரூ.1.24 கோடி மதிப்புள்ள 672 செல்போன் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் களவு போன திருடு போன 522 செல்போன் கடந்த ஆண்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இந்த ஆண்டு 32 லட்சம் மதிப்பில் 150 செல்போன் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம். நாடாளுமன்ற தேர்தல் முன் எச்சரிக்கையாக ரவுடிகள் அனைவரையும் கைது செய்ய செய்துள்ளோம்.

  ஒரு சிலர் நிலுவையில் உள்ளனர் அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  போதை பொருட்களை தடுக்கும் வகையில் சோதனை சாவடிகளிலும் ரயில் நிலையங்களிலும் சோதனை செய்வதாகவும் விற்பனையாளர்களை கைது செய்து வருவதாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறினார்.

   மலை வாழ் மக்கள் முழுவதுமாக திருந்தினால் அவர்களின் மறுவாழ்வுக்காக உதவி வருகிறோம். நமது மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டமில்லை. தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக துபாக்கிகளை ஒப்படைத்து வருகின்றனர். இன்னும் 60 துப்பாக்கிகள் நிலுவையில் உள்ளது அவைகளையும் உரிமையாளர்களிடமிருந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.