திமுக அரசை கண்டித்து தமிழகமெங்கும் அதிமுகவினர் மனிதசங்கிலி போராட்டம்!

கு.அசோக்,
திமுக ஆட்சியில் போதை பொருள் புழக்கம் என்று மையப்படுத்தி அதிமுகவினர் தமிழகமெங்கும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.
சென்னையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள், மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இராணிப்பேட்டை,
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நகர செயலாளர் வாசு தலைமையில் நடைபெற்றது.இதில் மாவட்ட அவைத்தலைவர் ஜி.சம்பத் கலந்து கொண்டு சட்ட ஒழுங்கு சீர் குலைவு ஏற்ப்பட்டுள்ளதாகவும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் நாடம்ட்டத்தால் மாணவர்கள், இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளதாகவும் கூறி விடியாத திமுக அரசை கண்டித்து கண்டன உரை ஆற்றினார்.
தொடர்ந்து திமுக அரசை கண்டித்து மாவட்ட நகர பேரூர் ஒன்றியம் கிளை நிர்வாகிகள் 300 கற்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயன் , ஏ.எல். சாமி ,நகர அவைத்தலைவர் ஞானமூர்த்தி நகராட்சி கவுன்சிலர் மணிகண்டன்,பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் பல பங்கேற்றனர்.
இதே போன்று நெமிலியிலும் பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் சார்பில் மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் வரை அதிமுக முன்னாள் பத்திரபதிவு துறை அமைச்சர் கே.சி வீரமணி தலைமையில் தமிழகத்தில் போதை பொருள் மாநிலமாக மாற்றி வரும் திமுக அரசை கண்டித்தும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்,
வேலூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் சத்துவாச்சாரியில் ஆ£.டி.ஓ சாலை மற்றும் காட்பாடி சித்தூர் பேருந்து பேருந்து நிலையத்தில், வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில், சுபாஷ் முன்னிலையில் கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு அதிமுக கட்சியினர் மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் போதையால் ஏற்படும் தீமைகள் குறித்தும், திமுக மற்றும் காவல் துறையினரின் போக்கை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். அதிமுகவின் இந்த மனித சங்கலி போராட்டத்தில் சுமார் 100- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.