வேளாண் அதிகாரி நெற்பயிருக்கு இழப்பீடு வழங்கிடுவாராம்!

 வேளாண் அதிகாரி நெற்பயிருக்கு இழப்பீடு வழங்கிடுவாராம்!

கு.அசோக்,

இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக  200 ஏக்கர் பரப்பளவு நெற்பயிர் சேதம் அடைந்திருப்பதாக மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

  இராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டத்திற்கு உட்பட்ட, மேல் புதுப்பாக்கம் கிராம பகுதியில் உள்ள ஏரி நிரம்பி இருப்பதன் காரணமாக ஏரி உபரி நீர் வெளியேறி வருகிறது.

   மேலும் அப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாகவும் ஏற்கனவே விலை நிலங்களில் மழைநீர் தேங்கி இருந்த நிலையில் தற்போது ஏரி உபரிநீர் கால்வாயில் செல்ல சரியான வழித்தடங்கள் இல்லாததால் ஏரியை சுற்றியுள்ள  விவசாய நிலங்களில் மழைநீர் மற்றும் ஏரி உபரி நீர் சூழ்ந்து நெற்பயிர் நிலங்கள் அனைத்தும் மூழ்கி சேதமடைந்துள்ளது.

 அப்படியிருக்க, வேளாண் துறை ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  பாதிப்பு தொடர்பாக மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் செல்வராஜ் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, வடகிழக்கு பருவமழை கனமழை காரணமாக மாவட்டத்தில் முழுமையாக பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் மற்றும் அனைத்து துறை விவசாய நிலங்களும் கணக்கிடப்பட்டு வருவதாகவும் மாவட்ட முழுவதும் 200 ஏக்கர் நெல் பயிர் மட்டுமே சேதம் என  மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

  புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட இடத்தில் வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு தெரிவித்தார்.