டீ விலையை ஏன் உயர்தினாய்?கேள்வி கேட்ட பொதுமக்கள்!

டீ விலையை ஏன் உயர்தினாய்?கேள்வி கேட்ட பொதுமக்கள்!

ஜி.கே.சேகரன்,

வாணியம்பாடியில் தேநீர் கடைகளில் டீ விலை 50 சதவீதம் உயர்வால் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

 திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தேநீர் கடைகளில் கடந்த 15 ஆம் தேதி வரை 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு டீ தற்போது 15 ரூபாய்க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட பார்சல் டீ 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் டீக்கடையை முற்றுகையிட்டனர்.

  ஹோட்டல் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது சங்க நிர்வாகிகளின் பேச்சு கேட்காமல் தன்னிச்சையாக ஓட்டல் உரிமையாளர்கள் விலை உயர்த்துள்ளனர் என்று பதிளித்தார்கள்.

   இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தனியார் தேநீர் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பால் விலை, சர்க்கரை விலை, டீ தூள் விலை எதுவும் உயரவில்லை. டீ விலை உயர்வுக்கு என்னா காரணம் என்று டீக்கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

   மேலும் ஏழை எளிய மக்கள் தினந்தோறும் 4,5 டீ யை குடித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி கூலி வேலை செய்து வருகின்றனர். ஒரு சிங்கிள் டீ மீது 50 சதவீதம் விலை உயர்த்தி உள்ளதால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் டீ விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும், இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்று எச்சரித்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.