விவசாயிகள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத கலெக்டர்!

விவசாயிகள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத கலெக்டர்!

 ஜி.கே.சேகரன்,

 திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  விவசாய குறை கூட்டம் இன்று நடைபெற்றது, இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமை வகித்தார்.

 விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியருக்கு எடுத்துரைத்தினர் இந்த நிலையில் ஆம்பூர் பகுதிகளில் கால்வாய்கள் தண்ணீர் வருவதற்காக தூர்வாக்கப்படுவதில்லை,விவசாயக் குறைத்திருநாள் கூட்டத்தில் விவசாயிகளின் வருவாய் துறையில் சேர்ந்த மனுக்கள் கொடுத்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை,

 மனுக்கள் நிலுவையில் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

 ஆம்பூர் பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் அள்ளிச் செல்கின்றனர் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை விவசாயி துறை திருநாள் கூட்டத்தில் மனு அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

 இரவு 11 மணி முதல் காலை 5 மணி முதல் ஆம்பூர் பகுதியில் நடைபெற்று இந்த மணல் திருட்டு நடந்து வருகிறது.

 நலிவுற்ற சங்கங்கள் மாட்டுக்கு கடன். பயிர் கடன். போன்றவைக்கு நாலு முறை மனு கொடுத்தும் இதுவரை ஸ்டேட்  பேங்க் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவும் இல்லை என வேதனை பொங்க சொன்னார்கள்.

  முழுவதையும் கேட்டுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உடனடியாக தங்களுடைய மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என சொல்லி கூட்டத்தை முடித்துக் கொண்டார்.