அரசு மருத்துவமனையில் வாடகை ப்ரிசர் பாக்ஸ்?! அடப் பாவிகளா?

அரசு மருத்துவமனையில் வாடகை ப்ரிசர் பாக்ஸ்?! அடப் பாவிகளா?

  ஜி.கே.சேகரன்,

  தலைமை அரசு மருத்துவமனையில் வாடகைக்கு குளிர்சாதன பெட்டி எடுத்து வந்து பிணங்களை பதப்படுத்தும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

 திருப்பத்தூர் மாவட்டம் புதிதாக பிரிக்கப்பட்ட பின்பு திருப்பத்தூரில் இயங்கிக் கொண்டிருந்த அரசு மருத்துவமனையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களுடன் மிளிர்கிறது?

  இப்படிப்பட்ட் வானுயர்ந்த கட்டிடங்களை கொண்ட திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை பல்வேறு அடிப்படை வசதிகளுடன் செயல்படுவதாகஅறிவிப்பு வெளியானது.

  ஆனால் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் பிணங்களை பதப்படுத்த பிணவறையில் குளிர்சாதன பெட்டி இல்லாத காரணங்களால் தனி நபர்களிடமிருந்து குளிர்சாத பெட்டியை வாடகைக்கு கொண்டு வந்து பிணங்களை பதப்படுத்த வேண்டிய அவல நிலை காணப்படுகிறது.

 பல்வேறு நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் பினவறையில் மட்டும் குளிர்சாத பெட்டி மற்றும் இல்லாதது சமூக ஆர்வலர்களிடையே கேள்வியை எழுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:- வேலூர் அரசு கால்நடைமருத்துவ மனையில் மருத்துவராக உள்ள ரவிசங்கர் என்பவர் பவுண்டேஷன் சார்பாக இலவச ப்ரீசர் பாக்ஸ் வழங்கியுள்ளார்.