விதிகளை பின்பற்றாத டாஸ்மாக் பாருக்கு தீ....! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

விதிகளை பின்பற்றாத டாஸ்மாக் பாருக்கு தீ....! காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!

ஜி.கே.சேகரன்,

 வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி அடுத்த அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் பெருமுகை பகுதியில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஏரியூர் பகுதியில் உள்ள  கோவிலில் நேற்று காலை திருவிழா நடந்துள்ளது.

அப்போது அலமேலுமங்காபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இரவில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவின் போதும் இருதரப்பை சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் மோதிக்கொண்டனர்.

 இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள். டாஸ்பமாக் உரிமையாளர் சந்துரு தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என முடிவெடுத்து, சந்துரு நடத்திவந்த டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டி விட்டு பின்னர் அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர் இதில் தொடர்புடைய நபர்கள் பத்துக்கும் மேற்பட்டோரை போலிசார் கைது செய்திருக்கிறார்கள்.

  இந்த பிரச்சனையில் சிக்கியிருக்கும் அனைவர்களும் படிக்கும் இளைஞர்கள் என்பதால் அவர்களை விடுவிக்கும்படியும், அதே போல் பதில் தாக்குதல் நடத்திய பார் உரிமையாலரின் தரப்பினரை ஏன் கைது செய்யவில்லை என்று கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் தலைமையில் சத்துவாச்சாரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

 அவர்கள் தலைமறைவாகிவிட்டனர், அவர்களையும் தான் கைது செய்வோம் என்று போலிசார் தெரிவித்தனர். அதற்கு இந்த கும்பல் அவர்கள் கண் மருத்துவமனையில் உள்ளனர் போய் பிடியுங்கள் என்று க்ளூ கொடுத்துவிட்டு கலைந்தனர்.

 சம்பவத்தில் தீக்கரையாக்கப்பட்ட டாஸ்மாக் பார் அரசு விதிகள் எதையும் பின்பற்றாமல் இயங்கி வந்திருக்கிறது. அதுதான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 

 வேலூர் மாநகர எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் இல்லீகல் பார் மற்றும் அரசுவிதிகளை பின்பற்றாத பார்கள் ஏராளமாக உள்ளது. அங்கெல்லாம் தினமும் சம்பவங்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் நடக்கும் சம்பவங்களை பார்க்கவே சகிக்கவில்லை.

சும்மா தகவலுக்காக அய்யா....!